வானவில்: சாம்சங்கின் பிரேம் இல்லாத டி.வி.


வானவில்: சாம்சங்கின் பிரேம் இல்லாத டி.வி.
x
தினத்தந்தி 8 Jan 2020 5:17 PM IST (Updated: 8 Jan 2020 5:17 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் டி.வி. தயாரிப்பில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முன்னேறியுள்ளது.

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் டி.வி. தயாரிப்பில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முன்னேறியுள்ளது. இந்நிறுவனம் பிரேம் இல்லாத டி.வி.யை தயாரித்துள்ளது. அதாவது வெறும் கண்ணாடி மட்டுமே இருக்கும். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2020 கண்காட்சியில் இது இடம்பெற்றுள்ளது. 8-கே ரெசல்யூஷனைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

சுவற்றில் பதிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டி.வி.யை செயல்படுத்தவும் பிற இணைப்புகளை அளிக்கவும் ஒரு ஆக்ஸஸ் போர்ட் அதாவது சாம்சங் கனெக்ட் பாக்ஸ் உள்ளது. இதில் அனைத்து வகையான இணைப்பு வசதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு சி.இ.எஸ். 2019-ல் பல நிறுவனங்கள் 8-கே டி.வி.யை காட்சிப்படுத்தின.

ஆனால் 8-கே டி.வி.யை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் சாம்சங் மட்டுமே. இந்த ஆண்டு அறிமுகமாகும் பிரேம் இல்லாத டி.வி.யும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.

Next Story