ஏற்ற இறக்கத்தில் பங்கு வியாபாரம் : சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்வு ; நிப்டி 0.05 புள்ளிகள் இறங்கியது


ஏற்ற இறக்கத்தில் பங்கு வியாபாரம் : சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்வு ;  நிப்டி 0.05 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 20 Jun 2019 3:34 PM IST (Updated: 20 Jun 2019 3:34 PM IST)
t-max-icont-min-icon

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் ஏற்ற தாழ்வுகளை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்தது. அதே சமயம் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.05 புள்ளிகள் இறங்கிறது.

குறியீட்டு எண்கள்

சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எவ்வித தூண்டுதலும் இல்லை. எனவே பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் ஒரு சில துறைகளுக்கான குறியீட்டு எண்கள் மட்டும் சரிந்தன. அதில் மருத்துவ துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.29 சதவீதம் சரிவடைந்தது. அதே சமயம் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் 1.0 சதவீதம் உயர்ந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் டாட்டா ஸ்டீல், கோட் டக் மகிந்திரா வங்கி, என்.டி. பி.சி., எச்.டீ.எப்.சி., பவர் கிரிட், ஒ.என்.ஜி.சி., ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், எச்.டீ.எப்.சி. வங்கி, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட 15 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் யெஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ் இந்த் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ உள்பட 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 66.40 புள்ளிகள் அதிகரித்து 39,112.74 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,435.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,881.05 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 700 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,867 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 120 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,317 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,057 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 0.05 புள்ளிகள் குறைந்து 11,691.45 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,802.50 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,625.10 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story