கரும்பு சாறு பருகலாமா?


கரும்பு சாறு பருகலாமா?
x
தினத்தந்தி 2 Jun 2019 7:42 AM GMT (Updated: 2 Jun 2019 7:42 AM GMT)

நிறைய பேர் கரும்பு சாறு பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்

கோடை காலத்தில் நிறைய பேர் கரும்பு சாறு பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. அதனை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

* கரும்பு சாறில் இயற்கையான இனிப்பு சுவை அதிகம் இருக்கிறது. அது உடலுக்கு உடனடியாக ஊக்கம் கொடுக்கும் தன்மை கொண்டது.

* 300 மி.லி. கரும்பு சாறில் 111 கலோரி உள்ளது. புரதம், கார்போஹைட்ரேட் மட்டுமின்றி அதிக அளவில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது.

* உடலிலுள்ள உப்பு சத்து இழப்பை ஈடு செய்யும்தன்மை கரும்பு சாறுக்கு உண்டு. அதனுடன் சிறிதளவு இந்துப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். கூடுதல் சுவை கிடைக்கும்.

* கரும்பு சாறு தினமும் உடலுக்கு தேவையான சர்க்கரையின் அளவை நிவர்த்தி செய்யும் தன்மையும் கொண்டது. உடலில் குளுக்கோஸ் அளவையும் சீராக பராமரிக்கவும் உதவும்.

* கரும்பு சாறில் கொழுப்பு துளியும் இல்லை. கோடை காலத்தில் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது.

* வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் கரும்பு சாறுக்கு பங்கு இருக்கிறது. வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடந்தால் தேவையற்ற உடல் எடை குறையும்.

* கரும்பு சாறில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கரும்பு சாறு பருகி வரலாம். இது செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலையும் தீர்க்க உதவும். குடல்களின் இயக்கம் சீராக நடைபெறவும் துணை புரியும்.


Next Story