ஆசிரமப்பள்ளியில் உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; ஆஸ்பத்திரியில் அனுமதி
ஆசிரமப்பள்ளியில் உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பண்டாரா,
ஆசிரமப்பள்ளியில் உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
30 மாணவர்கள் பாதிப்பு
பண்டாரா மாவட்டத்தின் தும்சர் நகரில் யெராலி ஆசிரமப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த சுகாதரத்துறை அதிகாரி மிலிந்த் சோம்குவார் அங்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவு, தண்ணீர் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மருத்துவ பரிசோதனை
இது பற்றி மிலிந்த் சோம்குவார் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் துணை மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விடுதியில் வழங்கப்பட்ட உணவு விஷமாக மாறி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது குறித்த விவரம் பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும். விரைவில் மாணவர்கள் அணைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள், என்றார்.