மும்பை- புனே விரைவு சாலையில் இன்று 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்
மும்பை- புனே விரைவு சாலையில் இன்று 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
மும்பை,
மும்பை- புனே விரைவு சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை வளைவு அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளது. அம்ருதாஜன் பாலம், கண்டாலா சுரங்கம் ஆகிய பகுதிகளில் இந்த வளைவு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளன. இதையொட்டி இன்று மதியம் 2 மணி நேரத்துக்கு மும்பை- புனே விரைவு சாலையில் புனே நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். இந்த தகவலை மாநில சாலை மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story