மும்பையில் 7-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
செல்போனை பெற்றோர் பிடுங்கிய ஆத்திரத்தில் 9-ம் வகுப்பு மாணவி 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
செல்போனை பெற்றோர் பிடுங்கிய ஆத்திரத்தில் 9-ம் வகுப்பு மாணவி 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
செல்போனில் நேரத்தை வீணடித்த மாணவி
மும்பை மலாடு லிபர்டி கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து சம்பவத்தன்று சிறுமி ஒருவள் குதித்தாள். தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சிறுமி மால்வாணி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி (வயது15) என்பது தெரியவந்தது.
மாணவி பெற்றோர் மற்றும் 3 சகோதரிகளுடன் வசித்து வந்து உள்ளார். அவர் செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக தெரிகிறது. எனவே பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர். எனினும் மாணவி அதிக நேரத்தை செல்போனில் வீணடித்து வந்து உள்ளார். எனவே கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர் மாணவியின் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டனர்.
மாணவி தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த மாணவி பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்றார். மாணவியை பெற்றோர் தேடி வந்தனர். இந்தநிலையில் தான் அவர் லிபர்டி கார்டன் பகுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவி ஏற்கனவே ஒரு முறை கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனை பெற்றோர் பிடுங்கி வைத்து கொண்டதால் 9-ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.