செல்போன் கடை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது - ரூ.35 லட்சம் பணம், செல்போன் பறிமுதல்


செல்போன் கடை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது - ரூ.35 லட்சம் பணம், செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Jun 2023 1:30 AM IST (Updated: 20 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த மாதம் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 3 பேர் கைது.

மும்பை,

மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள செல்போன் கடையை உடைத்து கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ஒரு கும்பல் ரூ.25 லட்சம் பணம் மற்றும் 67 ஐபோன் உள்பட ரூ.92 லட்சம் மதிப்பிலான 118 செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரவுடியான ராம்நிவாஸ் குப்தா தலைமையில் 6 பேர் கும்பல் செல்போன் கடையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராம்நிவாஸ் குப்தா, அப்துல் கானி யுனுஸ் சேக், ஆஷிஸ் பாண்டே ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story