நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்துக்கு எதிராக கன்னட டப்பிங் கலைஞர்கள் போர்க்கொடி


நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு எதிராக கன்னட டப்பிங் கலைஞர்கள் போர்க்கொடி
x

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துக்கு எதிராக கன்னட டப்பிங் கலைஞர்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர்.

பெங்களூரு:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள புதிய திரைப்படம் 'விக்ரம்'. இந்த திரைப்படம் கர்நாடகத்திலும் வெளியாகி உள்ளது. இதையொட்டி நேற்று நடிகர் கமல்ஹாசன் பெங்களூருவுக்கு வந்து விக்ரம் படம் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் கர்நாடகத்திலும் விக்ரம் திரைப்படம் தமிழில் வெளியாகி இருப்பதாகவும், அதனால் அந்த படத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் கன்னட திரைஉலக டப்பிங் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மேலும் அவர்கள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் வரையிலும் விக்ரம் படத்தை கன்னடர்கள் யாரும் பார்க்க கூடாது என்று கோரி சமூக வலைத்தளத்தில் 'பாய்காட் விக்ரம்' என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தை கர்நாடகத்தில் தமிழில் வெளியிட்டதற்காக எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்தும் பதிவிட்டுள்ளனர். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story