அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி


அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி
x
தினத்தந்தி 6 Sep 2024 5:16 PM GMT (Updated: 18 Sep 2024 11:15 AM GMT)

அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் வினேஷ் போகத்.

கவுகாத்தி,

அரியானா சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 5-தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாய ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில் அரியானா சட்டப்பேரவைத்தேர்தலையொட்டி காங்கிரசின் 31 வேட்பாளர்களைக்கொண்ட பட்டியல் வெளியானது. அதில், அரியானா சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்குகிறார். முன்னாள் முதல்-மந்திரி புபேந்தர் சிங் ஹுடோ காரி சம்பாலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இன்று வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. காங்கிரசில் பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story