வந்தே பாரத் ரெயில் நேர அட்டவணை...!


வந்தே பாரத் ரெயில் நேர அட்டவணை...!
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM GMT (Updated: 12 Nov 2022 12:16 AM GMT)

அங்கிருந்து புறப்பட்டு 12.20 மணிக்கு மைசூருவுக்கு சென்றடையும். இந்த ரெயிலில் சென்னையில் இருந்து 4.05 மணி நேரத்தில் பெங்களூரு வந்தடையலாம்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் (புதன்கிழமை தவிர) காலை 5.50 மணிக்கு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் புறப்பட்டு காட்பாடிக்கு காலை 7.21 மணிக்கு வரும். 4 நிமிடங்கள் அங்கு நின்றுவிட்டு காலை 7.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 8.25 க்கு ஜோலார்பேட்டை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வரும். ஆனால் அங்கு ரெயில் நிற்காது. அந்த ரெயில் காலை 10.15 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும். அங்கு 5 நிமிடங்கள் நிற்கும் ரெயில் 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.20 மணிக்கு மைசூருவுக்கு சென்றடையும். இந்த ரெயிலில் சென்னையில் இருந்து 4.05 மணி நேரத்தில் பெங்களூரு வந்தடையலாம்.

அதே போல் மறுமார்க்கமாக வந்தேபாரத் ரெயில் பகல் 1.05 மணிக்கு மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும். 5 நிமிடங்களுக்கு பிறகு அந்த ரெயில் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடக்கும். மாலை 5.36 மணிக்கு காட்பாடிக்கு வரும் ரெயில், அங்கு 3 நிமிடங்கள் மட்டும் நின்றுவிட்டு 5.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரெயில் மூலம் மைசூருவில் இருந்து 1.45 மணி நேரத்தில் பெங்களூருவுக்கு வர முடியும். விமானத்தில் இருக்கும் அதிநவீன வசதிகள் இந்த ரெயிலில் இடம் பெற்றுள்ளது. பயணிகளுக்கு விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இந்த ரெயில் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் பயணிக்கும் திறன் கொண்டது. இது நாட்டின் 5-வது வந்தேபாரத் ரெயில் ஆகும்.


Next Story