உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: குளத்தில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு


உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: குளத்தில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

உத்தரபிரதேசத்தில் குளத்தில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்ரா,

உத்தரபிரதேசத்தின் அவுரையா, கான்பூர் பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினர், காண்டவுளி பகுதியில் தங்கியிருந்து, சிறுசிறு பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 9 பேர், நேற்று காலை அந்தப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 குழந்தைகள் நீரில் மூழ்கினர்.

உடனே அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், 4 குழந்தைகளும் மூழ்கிய குழந்தைகளை மீட்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் குளத்தில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, குளத்தில் மூழ்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் குளத்தில் முழ்கியவர்களை மீட்க முயன்றனர்.

ஆனால் இதில் ஹினா, குஷி, சாந்தனி, ரியா ஆகிய குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். உயிரிழந்தவர்கள் சுமார் 10-12 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story