உ.பி.: பிரயாக்ராஜில் டெங்குவுக்கு 36 பேர் உயிரிழப்பு என அச்சம்? சிகிச்சையில் பலர்...


உ.பி.:  பிரயாக்ராஜில் டெங்குவுக்கு 36 பேர் உயிரிழப்பு என அச்சம்? சிகிச்சையில் பலர்...
x

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 36 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



பிரயாக்ராஜ்,


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப, ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதில் இருந்தே கடுமையான டெங்கு பாதிப்பு நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தது. நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இதுபற்றி பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண் கூறும்போது, மாவட்டத்தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

எனினும், டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக குஜராத், இமாசல பிரதேச தேர்தல் பணியில் பரபரப்புடன் உள்ளனர் என கூறி முதல்-மந்திரி யோகி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை நாடாளுமன்ற மேலவை எம்.பி. பிரமோத் திவாரி குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

இந்த சூழலில் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 36 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் அரசு நிர்வாகம் வெளியிடவில்லை. பிரயாக்ராஜ் நகரில் பல இடங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.


Next Story