உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 8 பேர் உயிரிழப்பு


உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 8 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர பால் (வயது 43) என்பவர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வாடகை காரில் வாரணாசிக்கு சென்றார். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அதே வாடகை காரில் வாரணாசியில் இருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். வாரணாசி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய கார் எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 9 வயது சிறுவன் பலத்த காயம் அடைந்தான். அவனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story