மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செப்.17 முதல் மெகா ரத்ததான முகாம்


மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செப்.17 முதல் மெகா ரத்ததான முகாம்
x

Image Courtesy: ANI

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை மெகா ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை மெகா ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முகாம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெகா ரத்ததான முகாமிற்காக இணையதள பக்கம் ( E-Rakt Kosh) ஒன்றை சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது. ரத்ததானம் செய்ய முன்வருபவர்கள் இந்த இணையதள பக்கத்தின் மூலமாக பதிவு செய்ய வேண்டும். ஆரோக்யா சேது செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், இந்தியாவில் இரத்த அலகுகளை சேமிக்க போதுமான திறன் உள்ளது. இந்த மெகா ரத்ததானத்தின் மூலம் இந்தியா உலக சாதனை படைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது ரத்ததானம் அளிப்பவர்களை பொறுத்தே உள்ளது.

நாங்கள் ரத்ததானம் அளிப்பவர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். அவர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்குகிறோம். இதன் மூலம் அவர்கள் மீண்டும் ரத்ததானம் செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story