ஜம்மு காஷ்மீர்: விபத்தில் 7 வீரர்கள் உயிரிழப்பு- ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இரங்கல்
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில்7 பேர் பலியானார்கள்.
ஸ்ரீநகர்,
ஜம்முகாஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளானது .
பஸ்சில் இந்தோ- தீபெத் எல்லை காவல் படை வீரர்கள் 37 பேர், ஜம்மு காஷ்மீர் போலீசார் 2 பேர் என மொத்தம் 39 வீரர்கள் பயணித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 7- ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.