நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்- நிதின் கட்காரி தகவல்


நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்- நிதின் கட்காரி தகவல்
x

நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதிய அமைப்பின் மூலம் நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் கிருஷ்ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாதும், மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அடுத்த ஆறு மாதங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்' என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார்.


Next Story