மிரட்டும் நிபா வைரஸ் - புதுச்சேரியின் மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


மிரட்டும் நிபா வைரஸ் - புதுச்சேரியின் மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் நாளை முதல் 17-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாஹே,

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 'நிபா' வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. 2 பேர் 'நிபா' வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நோய் பரவல் கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதால், கேரள மாநிலத்தின் அருகே உள்ள புதுவையின் மாஹே மாவட்டத்தில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் மாஹே மாவட்டத்தில் நாளை முதல் 17-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story