நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும் - பிரதமர் மோடி பெருமிதம்


நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும் - பிரதமர் மோடி பெருமிதம்
x

நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது,

பாஜகவுக்கு இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்.

அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு உயர்த்தியிருக்கிறது. 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. இது இந்தியாவிற்கான பொன்னான வாய்ப்பு. அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமைமிக்க இந்தியாவை கட்டமைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

இந்தியாவில் வறுமை வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. சுமார் 35 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். சுத்தமான குடிநீர் அளித்ததன் மூலம் 4 லட்சம் உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியிருக்கிறது. உலக நாடுகளுக்கு தெரியும் இந்தியாவின் வளர்ச்சி, எதிரில் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.

எங்களது சாதனைதான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனை கொடுத்துள்ளது. நாடு வளர்ச்சியடைவது எதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுக்கிறது.

எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை நான் வாழ்த்துகளாக எடுத்துக்கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்துவது தான் எதிர்க்கட்சிகளின் வேலை. எதிர்க்கட்சிகள் யாரை திட்டுகின்றனரோ அவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள் என்று கூறினார்.


Next Story