தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பதவி பறிபோகிறதா? - பரபரப்பு தகவல்


தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பதவி பறிபோகிறதா? - பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2023 3:25 AM GMT (Updated: 9 Jun 2023 3:45 AM GMT)

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.





Next Story