கல்லூரியில் சேரும் மாணவர்கள் பாதியில் வெளியேறினால் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்- யுஜிசி உத்தரவு


கல்லூரியில் சேரும் மாணவர்கள் பாதியில் வெளியேறினால் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்- யுஜிசி உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2022 3:16 AM GMT (Updated: 3 Aug 2022 4:25 AM GMT)

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் வெளியேறினால் முழு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது..

புதுடெல்லி,

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

ஜே.இ.இ, ஜே.இ.இ மெயின் உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலர் முன்னெச்சரிக்கையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை யு.ஜி.சி பிறப்பித்துள்ளது.

மேலும், சேர்க்கையை ரத்து செய்த மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் எனவும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என யு.ஜி.சி கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி தெரிவித்துள்ளது.


Next Story