லக்னோ- கோரக்பூர் வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் கற்கள் வீச்சு


லக்னோ- கோரக்பூர் வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் கற்கள் வீச்சு
x

கோப்புப்படம் 

லக்னோவில் இருந்து கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் மீது 3வது முறையாக கற்கள் வீசப்பட்டுள்ளது.

லக்னோ,

லக்னோ- கோரக்பூர் வந்தேபாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகளின் கூறும்போது, கோரக்பூர் மற்றும் லக்னோ இடையே ஓடும் வந்தேபாரத் ரெயிலானது, பாரபங்கி அருகே சபதாபாத் ரெயில் நிலையத்தை கடக்கும் போது, இரண்டு சிறுவர்கள் பாலத்தில் இருந்து கற்களை வீசி ரெயிலின் ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஜூலை 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்தேபாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கிவைத்த ஒரு மாதத்திற்குள் இது மூன்றாவது கல் வீச்சு சம்பவம் ஆகும்.

முன்னதாக ஜூலை 18 அன்று, லக்னோவில் இருந்து கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த வந்தேபாரதி ரெயில் மீது கற்கள் வீசப்பட்டன. கோரக்பூர் ஸ்டேஷன் அருகே உள்ள டோமின்கர் ரயில் நிலையத்தில் இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜூலை 11 அன்று, அயோத்தி மாவட்டத்தில் உள்ள சோஹாவால் நிலையம் அருகே மீண்டும் கற்கள் வீசப்பட்டன. மூன்று பேரை ஆர்பிஎப் கைது செய்தது, அவர்களின் ஆடுகள் ரயிலில் அடிபட்டதால் அவர்கள் கோபமடைந்தது கற்களை வீசியது கண்டறியப்பட்டது.

பொதுச் சொத்தின் மதிப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் எவ்வளவு பாதுகாப்பை வைத்தாலும், மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால், இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story