ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - ஒடிசா தலைமைச் செயலாளர் டுவீட்


ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - ஒடிசா தலைமைச் செயலாளர் டுவீட்
x

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர்,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே கடந்த வெள்ளிக்கிழமை தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் தற்போது ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. உரிய செயல்முறைக்குப் பிறகு அனைத்து உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. உடல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவை ஒடிசா அரசே ஏற்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.



Next Story