கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா நாளை பதவியேற்பு


கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா நாளை பதவியேற்பு
x

கன்டீரவா மைதானத்தில் நாளி சனிக்கிழமை) பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதால், பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

பெங்களூரு,

கர்நாடக மாநில முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் நாளை (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, கன்டீரவா மைதானத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை குயின்ஸ் சர்க்கிளில் இருந்து சித்தலிங்கய்யா சர்க்கிள் வரையும், போலீஸ் திம்மய்யா சர்க்கிள், அல்சூர் கேட் பகுதியில் சித்தலிங்கய்யா சர்க்கிளில் தடை விதிருப்பதால், தேவாங்க சர்க்கிளில் தேவாங்கா ஜங்ஷன், மிஷன் ரோடுகளிலும் கன்டீரவா மைதானத்தை சுற்றி இருக்கும் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள சாலைகளுக்கு பதிலாக மாற்று சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது விஜய் மல்லையா ரோடு, ஆர்.ஆர்.எம்.ஆர். ரோடு, மல்லையா ஆஸ்பத்திரி கேட், கஸ்தூரி பா ரோட்டில் எந்த விதமான வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் கே.ஜி.ரோடு மற்றும் ரிச்மவுண்ட் சர்க்கிளில் வாகனங்களில் இருந்து இறங்கி மைதானத்திற்கு வர வேண்டும். பஸ் உள்ளிட்ட வாகனங்களை அரண்மனை மைதானத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருபவர்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி அலுவலகம், செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானம், பாதாமி கவுஸ், மிசன் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் தொழிற்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு இன்று நடைபெற உள்ளதால், மாணவ, மாணவிகள் சிறிது நேரத்திற்கு முன்பாகவே வீட்டில் இருந்து புறப்பட்டு தேர்வு மையத்திற்கு செல்லும்படி போக்குவரத்து போலீசார் அனுமதித்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் செல்லும்படி மாணவ, மாணவிகள் தயாராக இருந்து கொள்ளும்படியும் போக்குவரத்து போலீசார் அறிவறுத்தி உள்ளனர்.


Next Story