சித்தராமையா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி போட்டியிடுவதாக ஆதரவாளர்கள் அறிவிப்பு


சித்தராமையா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி போட்டியிடுவதாக ஆதரவாளர்கள் அறிவிப்பு
x

சித்தராமையா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி போட்டியிடுவதாக ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அறிவித்து வருவதால், அரசியலில் கோலார் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

கோலார் தங்கயவல்-

சித்தராமையா

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான இருப்பவர் சித்தராமையா. இவர் கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்பு வரை ைமசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டு வந்தார். காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த தொகுதியை, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது மகனுக்காக சித்தராமையா விட்டு கொடுத்தார். அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டையாக திகழும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டார். மேலும், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிட்டார். இதில் வருணா தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா வெற்றி பெற்றார். ஆனால், சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியை தழுவிய சித்தராமையா, பாதாமி தொகுதியில் நூலிழையில் தான் வெற்றி பெற்றார். தற்போது பாதாமி தொகுதியிலும் செல்வாக்கை இழந்து வருவதாக தெரிகிறது.

கோலார் தொகுதி

இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2023) நடக்க உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று சித்தராமையா ஆலோசித்து வருகிறார். மேலும் அவர் கோலார் தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. சித்தராமையாவின் ஆதரவாளர்களும், அவர் கோலார் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறி வருகிறார்கள். இதற்கிடையே கே.எச்.முனியப்பா, சித்தராமையா கோலாரில் போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கோலாரில் சித்தராமையா போட்டியிடுவதற்கு டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும், கோலார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.ேக.சிவக்குமார் போட்டியிடுவார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, கோலார் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் குமாரசாமி போட்டியிடுவார் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

அரசியல் முக்கியத்துவம்

ஆனால் கோலார் தொகுதியில் போட்டியிடுவது குறித்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி ஆகியோர் எதுவும் கூறாமல் மவுனமாக உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இந்த கேள்விக்கான விடை கிடைத்து விடும். சித்தராமையா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி ஆகியோர் போட்டியிட உள்ளதாக ஆதரவாளர்கள் அறிவித்துள்ளதால் கோலாா் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.


Next Story