சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்


சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
x

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்.

பெங்களூரு:

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா. இருவரும் ஒரே கட்சியில் முக்கிய தலைவர்களாக இருந்தாலும், முதல்-மந்திரி பதவிககாக 2 தலைவர்களும் மோதிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா தலைமையில் ஒரு பிரிவினரும், டி.கே.சிவக்குமார் தலைமையில் மற்றொரு பிரிவினரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் யார்? முதல்-மந்திரி ஆவார்கள் என்பதில் தான் 2 தலைவர்களும் மோதிக் கொள்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

சமீபத்தில் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட முதலில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும், முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தராமையாவும், டி.கே.சிவக்குமார் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். டி.கே.சிவக்குமார் தோள் மீது சித்தராமையா கைபோட்டு நிற்பது, சித்தராமையாவின் சட்டையில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சின்னம் இருந்த பேட்ஜ்ஜை மாட்டியது போன்ற புகைப்படங்கள் வெளியானது. சட்டசபை தேர்தலையொட்டி தாங்கள் 2 பேரும் ஒற்றுமையாக இருப்பது போல் இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.


Next Story