ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை; சித்தராமையா பேட்டி


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை; சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பி.எப்.ஐ.க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

பி.எப்.ஐ.க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

எதிர்க்க மாட்டோம்

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்புக்கு தடை விதித்துள்ளது. சமுதாயத்தில் யார் அமைதியை சீர்குலைக்கிறார்களோ அவர்களுக்கு தடை விதிப்பதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், விரோத அரசியலை செய்கிறவர்கள், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் பணியை செய்கிறது. அந்த அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

நாங்கள் வரவேற்கிறோம்

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா வகையான மதவாதம் மற்றும் விரோத சமுதாயத்தை உருவாக்குவது தவறானது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதே போல், அரசியல் சாசனத்தின் விருப்பம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு அமைப்பையோ அல்லது அரசியல் கட்சியையோ காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து கொண்டே வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.


Next Story