பாலியல் வன்கொடுமை: இரு விரல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை


பாலியல் வன்கொடுமை: இரு விரல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை
x
தினத்தந்தி 31 Oct 2022 7:15 AM GMT (Updated: 1 Nov 2022 12:08 AM GMT)

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பாதிப்புக்குள்ளான நபருக்கு இரு விரல் சோதனை நடத்தக் கூடாது. இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. என தெரிவித்தனர்.

இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது எனவும், இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story