ராமர் கோவில் குடமுழுக்கு விழா; அயோத்திக்கு வர வேண்டாம் - பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்


ராமர் கோவில் குடமுழுக்கு விழா; அயோத்திக்கு வர வேண்டாம் - பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Dec 2023 11:53 PM GMT (Updated: 9 Jan 2024 9:37 AM GMT)

கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அடுத்த மாதம் 22-ந்தேதி அயோத்திக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க அடுத்த மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"அயோத்தி ராமர் கோவில் கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோவிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ராமர் கோவில் திறப்புக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம். உங்களுக்கு அருகில் உள்ள சிறிய அல்லது பெரிய கோவிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும், உங்களால் இயன்ற கோவிலுக்குச் செல்லுங்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story