அசாமில் இளநிலை மாணவருக்கு ராகிங் கொடுமை; 21 மாணவர்கள் சஸ்பெண்டு


அசாமில் இளநிலை மாணவருக்கு ராகிங் கொடுமை; 21 மாணவர்கள் சஸ்பெண்டு
x

அசாமில் ராகிங் கொடுமையால் விடுதி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 21 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.


திப்ரூகார்,.

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் அமைந்து உள்ள திப்ரூகார் பல்கலை கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இதுபற்றி ஆனந்தின் பெற்றோர் 5 பேர் மீது போலீசில் புகார் அளித்து உள்ளனர். அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவரின் நிலை சிகிச்சைக்கு பின்னர் தேறி வருகிறது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார். அசாமில் இளநிலை மாணவரை ராகிங் செய்த சம்பவத்தில் 21 மாணவர்களை சஸ்பெண்டு செய்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.


Next Story