ஜம்மு: காஷ்மீரி பண்டிட் படுகொலையை கண்டித்து போராட்டம்


ஜம்மு: காஷ்மீரி பண்டிட் படுகொலையை கண்டித்து போராட்டம்
x

காஷ்மீரில் பூரண் கிருஷ்ணன் பட் படுகொலையை கண்டித்து காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில், நடப்பு ஆண்டில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சவுதரி குண்ட் பகுதியை சேர்ந்த காஷ்மீரி பண்டிட் ஒருவரை கடந்த 15-ந்தேதி பயங்கரவாதி படுகொலை செய்தனர். தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பூரண் கிருஷ்ணன் பட் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச்சென்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் காஷ்மீரி பண்டிட்டுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஸ்ரீநகரில் உள்ள அனைத்துக் கட்சி ஹுரியத் அலுவலகத்தின் முன் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அந்த அலுவலகத்தின் சுவர் மற்றும் பதாகைகள் மீது இந்தியா என எழுதி போராட்டம் நடத்தினர்.


Next Story