அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்..! தீப உற்சவ விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்..! தீப உற்சவ விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x

பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாட உத்தரபிரதேசத்தின் அயோத்திக்கு இன்று மாலை சென்றடைந்தார்.

அயோத்தி,

பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாட உத்தரபிரதேசத்தின் கோவில் நகரமான அயோத்திக்கு இன்று மாலை சென்றடைந்தார்.

அயோத்திக்கு 2020ஆம் ஆண்டு சென்றிருந்த பிரதமர் மோடி, அப்போது ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு இன்று தான் அவர் அயோத்திக்கு சென்றுள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி சரயு நதிக்கரையில் அமைந்துள்ள கோவிலில் கண்கவர் லேசர் அலங்கார ஒளி அமைப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அதனை தொடர்ந்து, அயோத்தியில் தீப உற்சவ விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தம் அமைந்துள்ள இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, அங்கு ராஜ அபிஷேகம் பூஜையில் பங்கேற்பார். அதன்பின்னர், கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், "பகவான் ஸ்ரீராமரின் தெய்வீக ஆசீர்வாதங்கள் நம் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story