பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு காரணங்களால் பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என பெங்களூரு மின்சார நிறுவனம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கனகபுரா, ராமநகர், ஒன்னேபாகி, பெனகனஹள்ளி, அத்திகெரே, ஒசதுர்கா, சரஸ்வதி லே-அவுட், இரியூர் பசவப்பட்டணா, ஒசநகர், சாகர்பேட்டை, சித்தேஷ்வர்நகர், அருந்தி, ஜீனஹள்ளி, சன்னப்பட்டணம், ஒலல்கெரே டவுன், பொம்மனகட்டே, சித்ரஹள்ளி, அக்ரஹாரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story