20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்படும் குற்றவாளியாக இருந்த பீகார் முன்னாள் எம்.எல்.ஏ நேபாள எல்லையில் கைது!


20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்படும் குற்றவாளியாக இருந்த பீகார் முன்னாள் எம்.எல்.ஏ நேபாள எல்லையில் கைது!
x

பீகார் முன்னாள் எம்.எல்.ஏ திவாரி காத்மாண்டுவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

பாட்னா,

பீகார் மாநில முன்னாள் எம்.எல்.ஏ ரஞ்சன் திவாரி என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்படும் குற்றவாளியாக உள்ளவர்.

1998ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக உத்தரப் பிரதேச காவல்துறையால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். திவாரியை பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ.25,000 பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு தசாப்தங்களாக அவர் தப்பி ஓடி மறிந்து வாழ்ந்து வந்த அவர், இந்தியா-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரக்சவுல் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார். திவாரி ரக்சால் வழியாக காத்மாண்டுவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

உ.பி மற்றும் பீகார் போலீஸ் படைகளின் கூட்டுக் குழு அவரை கைது செய்தது. அதனை தொடர்ந்து விசாரணைக்காக அவர் உ.பி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story