ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே மந்திரி தான் பொறுப்பேற்க வேண்டும் - காங்கிரஸ்


ஒடிசா ரெயில் விபத்து:  ரெயில்வே மந்திரி தான் பொறுப்பேற்க வேண்டும் - காங்கிரஸ்
x

இந்த பெரும் சோகத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை என காங்., செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.

புவனேஷ்வர்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால், ரெயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்தன.

ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நின்றன, ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி சிதைத்தன.தடம்புரண்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் நொறுங்கி விட்டன. விபத்தில் சிக்கிய 3 ரெயில்களில் 2 ரெயில்கள் பயணிகள் ரெயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த பெரும் சோகத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை.மாதவராவ் சிந்தியா, நிதிஷ் குமார் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் தார்மீக அடிப்படையில் பதவி விலகினர். இந்த விபத்துக்கு ரெயில்வே மந்திரி தான் பொறுப்பேற்க வேண்டும் என காங்., செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.


Next Story