மும்பையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா


மும்பையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா
x
தினத்தந்தி 1 Jun 2022 11:16 AM GMT (Updated: 1 Jun 2022 11:39 AM GMT)

நாட்டின் சில முக்கிய நகரங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், மீண்டும் சில மாநிலங்களில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்றம் கண்டுள்ளது . மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து இருப்பதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவீதத்தை தாண்டியிருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை கண்டுபிடிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பரிசோதனகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

12-18 வயது வரம்பில் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. அதேபோல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதையும் விரிவுபடுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அறிகுறிகளுடன் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால் மருத்துவமனைகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும். மும்பையில் கடந்த பிபரவரி 6 ஆம் தேதி 536- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போதுதான் அதிரடியாக அந்த எண்ணிக்கையை கடந்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால், நாட்டில் 4-வது அலைதொற்று பரவலுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று பரவலாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.


Next Story