அக்னிபத் திட்டம்; பொன்னான வாய்ப்பை இளைஞர்கள் விட்டுவிட வேண்டாம் - பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட்


அக்னிபத் திட்டம்; பொன்னான வாய்ப்பை இளைஞர்கள் விட்டுவிட வேண்டாம் - பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட்
x

இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் புரிந்துகொண்டு ஒரு முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் ரெயில்கள், பஸ்களை தீயிட்டு கொளுத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். 4-வது நாளாக நேற்றும் வடமாநிலங்களில் போராட்டம் நடந்தது. இன்றும் போராட்டம் தொடருகிறது.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட், அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த திட்டம் பற்றி அவர் கூறியதாவது,

"அக்னிபத் ஒரு நல்ல திட்டம். இந்த பொன்னான வாய்ப்பை விட்டுவிட வேண்டாம் என்று இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்த தவறான புரிதல் இருந்தும், கோரிக்கைகளை கடைப்பிடிப்பது சரியல்ல. இந்த திட்டத்தால் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.

அதில் பிழை இருந்தால் தெரிவிக்கவும். ஆனால் நீங்கள் இப்படி பேருந்துகள், ரெயில்களை எரித்து, தேசிய சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கிறீர்கள். இது தவறானது. எதிர்க்கட்சிகள் பொறுப்பான கருத்துக்களை வெளியிட வேண்டும், தூண்டிவிடக்கூடாது.

இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் புரிந்துகொண்டு ஒரு முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அவர் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.


Next Story