திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்: மணப்பெண்ணின் தாயையும் சகோதரரையும் சுட்டுக் கொன்ற மாப்பிள்ளை


திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்: மணப்பெண்ணின் தாயையும் சகோதரரையும் சுட்டுக் கொன்ற மாப்பிள்ளை
x

கோப்புப்படம் 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரேலி,

உத்தர பிரதேசத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை, தான் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் தாயையும், சகோதரரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிஹாபாத், இசத்நகரை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவருக்கும் புப் ராம் - மீனா என்பவர்களின் மகளுக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் சஞ்சீவ் குமாரின் நடத்தை சரியில்லை என்று தகவல் கிடைத்த நிலையில் மீனா திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் குமார் நேற்று இரவு மீனாவையும் அவரது மகன் நேத்ராபாலையும் சுட்டுக் கொன்றார்.

அஹ்லத்பூர் காவல் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நைனிடால் நெடுஞ்சாலையில் அவர்கள் இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மீனாவின் கணவர் புப் ராம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவ் குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story