லாத்தூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 120 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்கப்படும் - மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே


லாத்தூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 120 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படும் - மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே
x

லாத்தூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 120 ‘வந்தே பாரத்’ ரெயில்கள் தயாரிக்கப்படும் என்று மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.

400 வந்தே பாரத் ரெயில்

மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே நேற்று லாத்தூரில் அமைக்கப்பட்டுவரும் ரெயில் பெட்டி தொற்சாலையை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

லாத்தூரில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க ரூ.600 கோடி மத்திய அரசு அனுமதித்துள்ளது. விரையில் இங்கு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இங்கு ரெயில் பெட்டி உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 400 புதிய வந்தே பாரத் ரெயில்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்து உள்ளார். இவற்றில் 120 ரெயில்கள் லாத்தூரில் தயாரிக்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 80 ரெயில்கள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய ரெயில்பாதை

மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய ரெயில் பாதைகள் அமைத்தல் மற்றும் மாநிலத்தில் நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க முயற்சி எடுத்து வருகிறது. வார்தா-யவத்மால்-நாந்தெட் மற்றும் அகமதுநகர்- பீட்- பார்லி வைஜ்நாத் ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

புதிய சோலாப்பூர்- துல்ஜாபூர் ரெயில் பாதை திட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ள நிலையில், மன்மத்- நாந்தெட் பாதையை இரட்டை ரெயில் பாதையாக மாற்றுவதற்கான முதல் கட்ட பணிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story