மக்களவை தேர்தல்: அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்கள் ஆலோசனை

மக்களவை தேர்தல்: அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்கள் ஆலோசனை
x

சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடு முழுவதும் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் கமிஷனர், கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அந்தவகையில், மக்களவை தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியா தேர்தல் ஆணையம் 2 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று இரவு டெல்லி செல்கிறார்.

சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story