சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை


சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை
x
தினத்தந்தி 16 April 2023 6:38 AM GMT (Updated: 16 April 2023 6:43 AM GMT)

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆஜரனார்.

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சாதகமான அம்சங்களையும், சலுகைகளையும் சேர்த்து, பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக கெஜ்ரிவால் நேரில் ஆஜராகியுள்ளார். முன்னதாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.


Next Story