காங். தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்


காங். தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
x

காங். தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு,

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.8 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. சில மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் பெங்களூருவில் ஐஸ்வர்யா நடத்தும் தனியார் பள்ளியில் திடீரென சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிற 22-ந் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. அதே போல் அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story