நாய்களை கொன்று குவிப்பதால் தீர்வு ஏற்படாது; முதல்-மந்திரி பினராயி விஜயன்


நாய்களை கொன்று குவிப்பதால் தீர்வு ஏற்படாது; முதல்-மந்திரி பினராயி விஜயன்
x

கேரளாவில் சமீப காலமாக நாய்களை கொன்று குவிப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கேரளா:

நாய்கள் தொல்லை தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் நாய்களை கொன்று குவிப்பதால், பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாய்களை விஷம் வைத்தும், அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதும் கூட்டம் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. தெருவோரங்களில் கண்ட, கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசி எறியும் மாமிசம் உள்பட கழிவுகளை உண்ணத்தான் அவைகள் கூடுகின்றன.

அந்த நேரத்தில் அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் தொல்லை செய்கிறது. கழிவுகளை பொதுவான, பாதுகாப்பான இடத்தில் சேமித்தால் இந்த பிரச்சினை ஏற்படாது. நாய்கடிக்கான மருந்துகள் தரமற்றது என புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு மத்திய சுகாதார துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி உள்ளார்.


Next Story