காஷ்மீர் பண்டிட்டுகள் தர்ணா ஆனால் பாஜக 8-வது ஆண்டை கொண்டாடுகிறது - ராகுல் காந்தி கண்டனம்


காஷ்மீர் பண்டிட்டுகள் தர்ணா ஆனால் பாஜக 8-வது ஆண்டை கொண்டாடுகிறது - ராகுல் காந்தி கண்டனம்
x

Image Courtesy : AFP 

'பிரதமர் அவர்களே இது படம் அல்ல, காஷ்மீரின் யதார்த்தம்' என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள கோபால்போரா என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஜ்னி பாலா (வயது 36) என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். இந்து சமூகத்தை சேர்ந்த அந்த ஆசிரியை நேற்று காலை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அண்மையில் கஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து நேற்று பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை காஷ்மீர் பண்டிட்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவின் பல நகரங்களில் போரட்டத்தில் ஈடுபட்ட பண்டிட்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்,பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்றும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பண்டிட்கள் 18 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தங்கள் ஆட்சியின் 8-வது ஆண்டை கொண்டாடுவதில் மும்மரம் காட்டுகிறது. பிரதமர் அவர்களே இது படம் அல்ல, காஷ்மீரின் இன்றைய யதார்த்தம்." என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story