காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்


காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, நடந்த விசாரணையில் 3 அரசு ஊழியர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது.

இந்த அதிகாரிகள், பயங்கரவாதிகளுக்கு தளவாட பொருட்களை வழங்குவது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவது மற்றும் பிரிவினைவாத கொள்கைகளை பரப்புவது உள்ளிட்டவற்றால் இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது கண்டறியப்பட்டு உள்ளது.

அவர்கள் 3 பேரும், காஷ்மீர் பல்கலை கழகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி பஹீம் அஸ்லம், போலீஸ் கான்ஸ்டபிள் அர்ஷித் அகமது தோக்கர், வருவாய் அதிகாரி முராவத் உசைன் மிர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு உள்ளனர் என்பது விசாரணையில் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இதுவரை பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 52 அரசு அதிகாரிகள் இதுவரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story