நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம்


நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம்
x

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் இந்த தேர்வை நடத்துகிறது. நீட் நுழைவுத் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போவதால் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகாவிலும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கு வங்காள சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story