ஜார்கண்டில் கொரோனா அறிகுறிகளுடன் வந்த 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!


ஜார்கண்டில் கொரோனா அறிகுறிகளுடன் வந்த 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!
x

நோயாளிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேருக்கு ஹச்1என்1 வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ராஞ்சியில் உள்ள பகவான் மகாவீர் மெடிகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இரண்டு நோயாளிகள் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் பரிசோதனை அறிக்கைகள் திங்கள்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஞ்சியை சேர்ந்த 37 வயது பெண், தன்பாத்தை சேர்ந்த 56 வயது பெண் மற்றும் மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்த 70 வயது ஆணுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நோயாளிகள் அனைவரும் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்தார்கள். அதனை தொடர்ந்து, நோயாளிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.

அதனை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் கொரோனா அறிகுறிகள் போலவே இருப்பது பெரும் கவலையளிப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த நோய் உள்ளூர் சமூகத்தில் சமூகப்பரவலாக பரவி வருவதாகத் தெரிகிறது.


Next Story