இந்தியாவுக்கு காமன்வெல்த் அமைப்பு பாராட்டு


இந்தியாவுக்கு காமன்வெல்த் அமைப்பு பாராட்டு
x

image Courtacy: AFP

இலங்கைக்கு செய்த உதவிகள் நெஞ்சைத்தொடுவதாக இந்தியாவுக்கு காமன்வெல்த் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, இந்தியாவுக்கு வந்துள்ளார்.

அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிற இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகளை மனம் திறந்து பாராட்டி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "இலங்கைக்கு இந்தியா தாராளமாக செய்து வருகிற பன்முக உதவிகளைப் பார்ப்பதற்கு நெஞ்சைத் தொடுகிறது. இது காமன்வெல்த் அமைப்பின் உணர்வுப்பெருக்குக்கும், மதிப்புகளுக்கும் உதாரணமாக அமைந்துள்ளது" என தெரிவித்தார்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 56 நாடுகள் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகள் ஆகும்.

பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டில் 3.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ.30 ஆயிரத்து 260 கோடி) உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story