101 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி - மக்களவையில் அறிவிப்பு


101 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி - மக்களவையில் அறிவிப்பு
x

கோப்புப்படம்

101 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா 101 நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்புகளுக்கும் 23 கோடியே 90 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து அசத்தி இருக்கிறது.

இந்த தகவலை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 19-ந் தேதி வரையில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 200 கோடியே 34 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோவிஷீல்டு, கோவோவாக்ஸ், கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, கோர்பேவாக்ஸ் ஆகிய 5 தடுப்பூசிகள் உள்ளதாகவும், அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தேவையான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்கச்செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story