உலகளாவிய புதிய கல்வி செயலியை தொடங்கியுள்ளேன் - சவுரவ் கங்குலி தகவல்


உலகளாவிய புதிய கல்வி செயலியை தொடங்கியுள்ளேன் - சவுரவ் கங்குலி தகவல்
x

Image Courtesy : PTI

உலகளாவிய புதிய கல்வி செயலியை ஆன்லைனில் அறிமுகப்படுத்தி உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக பிசிசிஐ தலைவராக இருந்து வரும் கங்குலி தனது டுவிட்டர் பதிவில், 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த புதிய அத்தியாத்திற்கும் அனைவரும் ஆதரவு இருக்கும் என நம்புவதாக பதிவிட்டிருந்தார்.

சவுரவ் கங்குலியின் இந்த பதிவால் அவர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகக் கூடும் என்று பரவலாக விவாதங்கள் எழுந்தநிலையில், பொறுப்பில் இருந்து அவர் விலக மாட்டார் என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.

இதனிடையே கொல்கத்தா சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சவுரவ் கங்குலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் கலந்துரையாடினார். இதை சுட்டிக்காட்டி, கங்குலி பாஜகவில் இணைவார் என்று பலரும் கூறினர்.

இந்நிலையில் தான் ஒரு உலகளாவிய புதிய கல்வி செயலியை ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதன்மூலம் சில மணி நேரம் நீடித்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.


Next Story