டெல்லியில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது


டெல்லியில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது
x

டெல்லியில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினியில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மணீஷ் (வயது 34) மற்றும் அவரது கூட்டாளி டிங்கு (வயது 34) இருவரும் சென்ற காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் மீட்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கிழக்கு டெல்லியில் உள்ள நந்த் நாக்ரியில் வசிக்கும் மணீஷ், கடந்த 2014-ம் ஆண்டு லாஹோரி கேட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 2019-ம் ஆண்டு வெளிவந்த மணீஷ் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் நஷ்டம் அடைந்தார். பின்னர் டெல்லி-என்சிஆரில் சைக்கோட்ரோபிக் பொருட்களை விற்கத் தொடங்கினார்.

கைது செய்யப்பட்ட மற்றொருவரான டிங்கு, மணீஷின் குழந்தை பருவ நண்பர். ஷாஹ்தராவில் வசித்து வந்த டிங்கு, முன்பு கலால் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி-என்சிஆர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்கு மணீஷுக்கு டிங்கு உதவி வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story